நகரம் என்பது நரகத்தின் மறு பெயரோ
நாம் ஓடி ஆடி விளையாட அகண்ட தெருக்கள் இல்லை
வாகனங்கள் வரிசையில் நிற்கும் சாலைகள் இங்கு உண்டு
தாகம் தனிப்பதற்கென்று நீர் நிறைந்த குளங்கள் இல்லை
குடி நீரினை விற்கின்ற கடைகள் அதிகம் உண்டு
களைப்பாறும் பொருட்டு நாம் அமர திண்ணைகள் இல்லை
நாய்கள் ஜாக்கிரதை எனும் பலகை தொங்கும் வீடுகள் பல உண்டு
பசித்தவர்க்கு உணவு அளிக்கும் வெள்ளை மனம் இல்லை
பிச்சை கேட்பவனின் தரம் அறிய எண்ணும் அறிவு பலர்க்கு உண்டு
கிராமத்தில் பக்கத்துக்கு தெரு கோபியையும் அறியாதவர் இல்லை
எதிர் வீட்டில் வாழ்பவரின் பெயர் அறியாதோர் உண்டு
அன்று அம்மா அப்பா சொல் பேச்சை மீறியவர் இல்லை
தன் சுகந்திரம் பெற்றோரை அவமதித்தல் என்று நினைப்பவர் இங்கு உண்டு
வேகமெதற்கு என்று சிந்திக்கும் அறிவு எவர்க்கும் இல்லை
விபத்து ஒன்று நடந்துவிட்டால் கண்டு கொள்ளாமல் கடப்பவர்கள் உண்டு
இங்கு மனிதர் வாழ முடியும் என்ற நம்பிக்கை இல்லை
நகரம் என்பது நரகத்தின் மறு பெயரோ என்ற ஐயம் என்னில் உண்டு .....!!!!