குழிக்குள் தெரியும் வானம் 0 தாரகை 0
உண்மை பேசும் போதும்
உண்மைக்கு பேசும் போதும் மட்டும்
உள்ளம் அஞ்சுகிறது!
பிறரிடம் கையேந்துபவனும்
வாய்விட்டுக் கேட்பவனும்
ஏழையாக வாழ்வதில்லை !
ஓய்வும்,ஆரோக்கியமும்-அதன்
மதிப்பை உணர்த்த தவறுவதில்லை
போனபிறகு!
சொல்லிவிட்டு போபவனும்
போய்விட்டேனென சொல்பவனும்
போக விரும்புவதில்லை!
வாய்ப்புகளைத் தேடித்தேடி அயர்ந்ததால் கேட்கவில்லை
கதவு தட்டப்படுவது!
தோல்விகளுக்கு காரணங்களாய்
நாமாகிப் போவதே கூடுதல் வலி
தோல்வியின் வலியை விட!