யாதுமாகிய என்னவளுக்காக

என்ன ஆச்சரியம்
நான் எதை பற்றி எழுத தொடங்கினாலும்
உன்னை பற்றியே எழுதி முடிகிறது என் பேனா...
**********************************************************************************************
Google மீது நம்பிக்கையற்று போனது
காரணம்
அழகு என்ற வார்த்தை தேடலில்
உன்னையின்றி பிதற்றுகிறது - வேறு ஏதேதோ விளக்கங்களுடன்....
****************************************************************************************************
கதிரவன் கூட உன்னை காண
ஜாக்கிங் வருகிறான் உந்தன் வீட்டு ஜன்னல் வழியே-என்னை போல
வந்தவனை கண்டும் கானது போல
திரை மூடி மறைகிறாய்
என்ன ஆச்சரியம்
உன் கை விரல் பட்டவெட்கத்தில்
ஜன்னல் திரைகள் மூடிக்கொள்கிறது தன்னையும் அறியாமலே...
*******************************************************************************************************
இயற்கையின் அழகை மிஞ்சி பிறந்தவள் நீ என்பதால் என்னவோ
இயற்கையாகவே இறைவன் அமைத்த
திருஷ்டி பொட்டுஉந்தன் மச்சம்....
**********************************************************************************************************
பொதுவாக காதலுக்கு கண் இல்லை என்பார்கள்
உண்மைதான் போலும் - நான்
எதை பார்த்தாலும்
யாவுமாய் நீயே தெரிகிறாய்
யாதுமாகிய என்னவளே
உனக்காவது தெரியுமா
இத்தனை கற்பனைக்கும்
இனி நீயேதான் சொந்தக்காரி என்று......
என்னவளுக்காக
பரமகுரு க