நினைத்தேன் வந்தாய்

நினைத்தேன் வந்தாய்
==============================ருத்ரா

நினைத்தேன் வந்தாய்
என்பதற்கு
நான் என்ன அலாவுதீன் பூதமா?
அதற்கும் ஒரு விளக்கு வேண்டும்.
நீ இருட்டில் அல்லவா
என்னை
சித்திரம் தீட்டுகிறாய்.
நாளை
உன் வீட்டு முற்றத்தில்
மஞ்சள் கூந்தல் விரித்துக் கிடப்பேன்.
அளி போட்ட திண்ணை வழியே.
காலை வெளிச்சம் கூட‌
நீ எழும் வரை
உன் காலை சுற்றும் பாம்பு தான்.
என்னில் கரைந்து
உன்னைக்கரைத்துக்கொண்டது போதும் வா.
கல்லூரிக்கு வா.
அந்த குவாண்டம் மெக்கானிக்ஸ் பேராசிரியர்
ஸ்க்ரோடிங்கர் பூனையை
மடியில் கட்டிக்கொண்டு தானே
நம்மோடு மல்லு கட்டுகிறார்.
பூனை செத்திருக்கிறது.
பூனை மியாவ் என்கிறது.
பிம்பங்கள் இரண்டாய் பிளந்த நிலை அது.
காதல் காதல் காதல்..
சாதல் சாதல் சாதல்..
இரண்டும் இல்லை.....வா.
பாரதியின் காதல் குவாண்டம் மெக்கானிக்ஸில்
கனவில் பிறக்கும்
நனவில் இறக்கும்.
வகுப்புக்கு வா..எல்லாம் புரியும்.
அவனும் வகுப்புக்கு சென்றான்.
அவள் அவனை நோக்கி
கண் சிமிட்டினாள்.
கனவா நனவா என்று
கிள்ளிப்பார்த்துக்கொள்ளுமுன்
அவள் கால்களைப்பார்த்தான்
தரையில் படுகிறதா என்று..
......
அய்யோ ...இதென்ன?
அவள் சுடிதார் பாட்டம்
தொள தொளவென்று
காற்றில் ஆடுகிறது!
குவாண்டம் ப்ரொஃபெஸ்ஸார்
பேய்ச்சிரிப்பு சிரிக்கிறார்.

எழுதியவர் : ருத்ரா (9-Apr-15, 1:07 am)
Tanglish : ninaithen vanthai
பார்வை : 91

மேலே