யாவிலும் அவளே
![](https://eluthu.com/images/loading.gif)
அலங்காரம்
அல்லது
ஆலயம் என
ஒரு நாள் மட்டும்
உயிர் வாழும்
எங்களைப் போய்
கடவுளே என்று- இவன்
கை கூப்பிய போது
மயங்கிய நாங்கள்
உன் பெயர்
உச்சரித்த போது
எழுந்து உட்கார்ந்தோம்....
எம்
பரம்பரைக்கே கிடைக்காத
பாக்கியமா....
உயிருடன் ஓர் கடவுளா
போய்த் தான் பார்ப்போமே என
கூடையில் குந்தி
ஊடகம் மூலம்
ஓடோடி வந்தோம்
உம்மைக் கண்டு வணங்க...