என் வாழ்க்கை -பிரியாராம்
தலை முடி சிக்கில் சிக்கல்
ஆரம்பித்து நளினமாய் தலை
கோதும்வரை எல்லாமே இன்னல்
நிறைந்ததுதான் என் வாழ்க்கை ...
பெண்ணாய்
நான் நடக்கும் நடைக்கும்
சிரிக்கும் சிரிப்புக்கும் மட்டுமே
ஆயிரம் அர்த்தங்கள் இங்குண்டு ..
கண்ணாடி
குடுவைக்குள் அடைபட்ட
அந்த மீன்குஞ்சு ம் கூட
அச்சமின்றி நீந்துகிறது
மின்வேலி கம்பியென
என் வாழக்கை எடுத்து வைக்கும்
ஓவ்வொரு அடியிலும் மின்சாரத்தைப்
பாய்ச்சி உணர்வை மறுக்கச் செய்கிறது
சிறகு முளைத்த
தேவதையாய் நான் பறக்க
நாதியற்று கூண்டுக்குள் கூட
நிம்மதியற்றே கிடக்கிறேன் ..
ஈறாரண்டு நானெடுத்த
உறுதிமொழி அடுத்தவனை அண்ணா
என்று விளிக்க அர்த்தமற்று நிலை
குலைவதுதான் என் வாழ்க்கை ...
என்னை விரும்பும்
அவன் என்றுமே ஆண்தான்
எனக்கு மட்டும்தான் பத்தினி முதல்
தாசி வரை பக்குவமாய் பலபெயர்கள் ..