என்னவனுக்கான கவி
என்னவனுக்கான
கவியை -என்
எழுதுமுனை எழுதாதிருந்தால்
பேனா மையும் -பெரு
துளி விஷம் தான்
கவிக்காக காத்திருக்கும் -என்
வெறுமையான காகிதத்துக்கு
ஒளிதரும் நிலவொளியும்
வெய்யிலில் காயும் மிளகாய் வத்தல்தான்-கவி
காணாது
வதங்கிப் போன தெருமுனை விளக்கிற்கு முன்னாள்
தேன் சுவைகொண்ட தேநீரும்
கவிச் சுளை இல்லாமல்
தேளாக கொட்டும் -பேனா
பற்றிய என் இரு விரல்களை
தனிமையையும் கண்ணீரையும்
தாங்கும் என் மேஜைக்கு -கவி
பதிக்கா காகிதம்
தாய் மடியில்லா உறைவிடம் போல
கலை இழந்து கிடக்கும்
வீற்றிருக்கும் -என்
செல்ல இருக்கையும்
சிவனின் ருத்ர தாண்டவமாய்
தலைகீழாய் மாறி -எனை
வஞ்சனைப் பெண் என
உலகம் நாவால் சிதறடிக்கும் முன்னர்
எழுதுமுனையால் எழுதிக்கொள்கிறேன்
"அவன் முதல் எழுத்தோடு என் பெயரை "
என்னவனுக்கான முதல் கவியாய்

