முரண்பாடுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
எனது ஆண்மையின்
கடினமான வெளிப்பாடுகளை
பாறை மனமென்று
பலமுறை
விமரிசனம் செய்திருக்கிறாய்
உன்னை
வியக்காத தருணங்கள் இல்லை
பெண்ணின் மணம்
இத்தனை ஈரமானதா என்று
அழியாத கல்வெட்டாய்
இன்றும்
நம் காதல் தாங்கி நிற்கிறது
என் பாறை இதையம்
நீர்மேல் எழுத்துப்போல்
என்
நினைவுகள் கலைத்தது
உன் ஈர இதையம்