பாடல்
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ
சலவைக்கல்லே சிலையாக தங்க பாளம் கையாக
மலர்களிரண்டு விழியாக
மயங்கவைத்தாளோ…
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ..
முத்து மணித்திரள் ரத்தினமோ
மொய்குழை மேக சித்திரமோ
முத்து மணித்திரள் ரத்தினமோ
மொய்குழல் மேக சித்திரமோ
செக்கச்சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ
செக்கச்சிவந்த இதழாலே
சிந்தும் புன்னகை மந்திரமோ
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ
கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
கண்கள் மயங்கும் கண்ணானாள்
பெண்கள் மயங்கும் பெண்ணானாள்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நிலவில் மயங்கும் இருளானாள்
நினைவில் மயங்கும் பொருளானாள்
நினைவில் மயங்கும் இருளானாள்
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்
அச்சம் நாணம் மடம் கொண்டாள்
மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்
மனதை சேர்த்து ஏன் கொண்டாள்
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ
யார் யார் யார் அவள் யாரோ..
ஊர் பேர் தான் தெரியாதோ
ஆஹா ஆஹா ஆஹா…ஹா ஹாஹா….
ஓஹோ…ஓஹோ…..ஓஹோ….ஹோ…ஹோ…ஹோ…