புதுவருஷம்தான் எனக்கு

தினமும் பிறக்கும் வருடம்தான்
ஆனாலும் ...!
கோவிலுக்கு போவதால்
புதுவருஷம்தான் எனக்கு !

தினமும் கோவிலுக்கு போவதுதான்
ஆனாலும்...!
புத்தாடை அணிவதால்
புதுவருஷம்தான் எனக்கு !

தினமும் அணியும் ஆடைதான்
ஆனாலும் ....!
தோய்த்து உலர்ந்த ஆடை
புத்தாடைதான் எனக்கு!
புதுவருஷம்தான் எனக்கு !

சிப்பி,சோகி,முறுக்கு என
வகை வகையாய் உண்ணப்பலாக்காரம்
அயல் வீடுகளில்
ஆனாலும்...!
புதுவருஷம்தான் எனக்கு !

பெரியவர்கள் காசு கொடுப்பார்களாம்
கைவிஷேஷமாம்
எனக்கு யார் கொடுப்பார்கள் ....???
ஆனாலும்...!
புதுவருஷம்தான் எனக்கு !

மொத்தத்தில்
மருதடியானுக்கு தேராம் !!!
அது ஒன்று போதுமே!
அப்போ புதுவருஷம்தான் எமக்கு!!!

புதுவருட வாழ்த்துக்கள்
நட்பு உள்ளங்களே !

எழுதியவர் : TP Thanesh (12-Apr-15, 7:49 pm)
பார்வை : 168

மேலே