தீவிரவாதத்திற்கு தீ வைப்போமா…. ??
எதற்காய்
இத்தனை
உயிர்ப்பலிகள்....?
எல்லாருமே
அழிந்தபிறகு
யாருக்கானது
இவ்வாழ்க்கை....?
தீவிரவாதி....
எல்லா
தேசங்களையுமே
எரிக்கின்ற
தீ வாதி...
மனிதத்தின்
ஆடைகள்
களையப்படுமானால்...
அதில்
மதங்களே
தங்களை
நிர்வாணப்படுத்திக்கொள்ளும்...
மனிதனுக்குள்
மறைந்திருக்கிற
மிருகம்
வெளியேவர
அணிந்துகொண்ட
முகமூடி.....
அன்று .....போர்
இன்று...மதம்...!
பட்டை
சிலுவை
குல்லா
இவையெல்லாமே
மதங்களின்
புற எச்சங்கள்...
இல்லாமல்கூட
வாழ்ந்துவிடலாம்...
அன்பு
கருணை
அஹிம்சை
இவைதான்
மானுடம்
நிலைத்திருப்பதற்கான
மிச்சங்கள்...
இல்லாமல்
ஏது வாழ்க்கை ?
இந்துவோ
கிறித்துவரோ
முஸ்லீமோ
நல்லதனமாய்
நமக்குள்
மனிதம் இருக்க...
நண்பர்களாய் இருப்போம்...
கள்ளதனமாய்
மதம்
பிடிக்க
எதிரிகளாய் போவோம்..
கீதையும் சொல்லவில்லை..
பைபிளும் போதிக்கவில்லை..
குரானும் ஓதவில்லை...
மனிதனுக்கு
எதிராக
மனிதனையே
ஆயுதம் எடுக்கச்சொல்லி....
அன்புதான்
எல்லாமதங்களும்
கற்றுத்தருகிற
ஒரே போதனை...
அன்புதான்
எல்லாமதங்களையும்
கட்டியிழுக்கும்
பட்டு நூல்கண்டு...
அன்பை தொலைக்க..
இந்துவோ
கிறித்துவரோ
முஸ்லீமோ
யாராயிருந்தாலும்
அவனே தீவிரவாதி....
அன்பை விதைக்க...
இந்துவோ
கிறித்துவரோ
முஸ்லீமோ
யாராயிருந்தாலும்
அவனே
உண்மையான மதவாதி... !!!!!