தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. .

மன்மத ஆண்டினை வரவேற்போம்
மாவிலை தோரணம் கட்டி வரவேற்போம்
வெற்றியைத் தவிர இனி வேறில்லை
முன்னேற்றம் காணவே தடையில்லை..!!

எங்கள் வாழ்வினில் இனி யாவும்
மங்கலம் விளங்கிடச் செய்திடுவாய்
பொங்கும் மகிழ்ச்சி எங்கெங்கும்
தங்கிடும் அதுவே எந்நாளும்...!!

திங்களைப் போலவே ஒளி வீசி
நலங்கள் பெருகியே வாழ்ந்திடலாம்
தூய எண்ணம் கொண்டேதான்
நம் வாழ்வில் என்றும் மகிழ்வுறலாம்...!!

நாட்டில் வளங்கள் பெருகிடவே
வானம் பொய்க்காது மழை பொழியும்
பசுமை தழைத்தே பயிர் விளையும்
பஞ்சமும் பஞ்சாய் பறந்தோடும்...!!

நீர் நிலை நிறையும் வளம் பெருகும்
வணிகம் செழிக்கும் தனம் கொழிக்கும்
போராட்டமெல்லாம் போய் ஒழியும் - மகிழ்ச்சி
தேரோட்டம் விட்டே மனம் மகிழும்..!!

வருக... வருக புத்தாண்டே
நலன்கள் பெருக... பெருக.. அருள் நீயே
கரங்கள் கூப்பி வணங்குகிறோம்
நல் வரங்கள் அளிப்பாய் வாழ்ந்திடுவோம்...!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்...

-சொ. சாந்தி-

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : சொ.சாந்தி (14-Apr-15, 7:02 am)
பார்வை : 2291

மேலே