இரண்டு வெற்றிடங்கள்

அந்தத் தள்ளுவண்டி
அம்மாவிடம்
கொஞ்சம் செவ்வாழை
கொஞ்சம் திராட்சை
வாங்கியதற்கு
நூறு ரூபாய் நீட்டி
" இந்தாங்கம்மா "
என்பதிலும் ,
பெற்றுக்கொண்ட அவள்
மீதிச்சில்லறை எடுத்து
" இந்தா கண்ணு "
என்பதிலும்
அழகாக நிரம்பிவிடுகின்றன
இரண்டு வெற்றிடங்கள் !

எழுதியவர் : குருச்சந்திரன் (14-Apr-15, 9:55 am)
Tanglish : irandu vetridangal
பார்வை : 107

மேலே