பிறந்துக் கொண்டே இருக்கிறது - உதயா

சித்திரை பிறந்தது
நித்திரைக் கலைந்தது
நினைவிலும் இன்பம் குறைந்தது
நாட்டிலும் துன்பம் வளர்ந்தது

அன்று பொன்னேருக் கட்டி
பூமிக்கு விருந்திட்ட உழவனே
இன்று பூமியைப் பிளந்து
தானே விருந்தாகிறான்

கத்திரி வெயிலிலும் கம்மாய்கள்
காயாமல் கனவுக் கண்டதே அன்று
காலமெல்லாம் உழைத்தும் முழுவேலை
உணவில்லை ஏழைக்கு இன்று

நாளும் நாளும் புத்தாண்டானது
நல்வளத்தில் வாழும் வாசிக்கே
நொடிக்கு நொடியும் சுடுகாடானது
அந்த முதியோர் இல்லத்தின் வாசிக்கே

உம் வாழ்வில் நலன்கள்
பெருகிட்டப் பின்னே
அதனை அனாதைகளுக்கும்
கொஞ்சம் ஆதாயமாக்கு

அறுசுவை விருந்து
படைக்கும் சமையலறையில்
ஆடு மாடுகளுக்கு
நிரந்தர ஓய்வளியுங்கள்

உள்ளத்தில் மகிழ்வில்
எரியும் மாவிளக்கோடு
மனிதபிமானத்தையும்
சுடர் ஒளியாக்குங்கள்

வளமும் வளரட்டும்
வாழ்வும் செழிக்கட்டும்
வறியவருக்கும் இதுபோல்
வாழ்வு பிறக்கட்டும்

நாட்டில் கஷ்டம் கலையட்டும்
கனவெல்லாம் நிஜமாகட்டும்
அந்த கடலின் ஓரத்தில் காமம் எரிந்து
காதல் மட்டும் காட்சி ஆகட்டும்

வளன் மட்டும் ஓங்கட்டும்
ஏழ்மை மண்ணில் புதையட்டும்
ஏழ்மையின்றியே ஏழையும் சிரிக்கட்டும் அதில்
கணத்திற்கு கணமும் கடவுள் காட்சியாகட்டும்

எழுதியவர் : udayakumar (14-Apr-15, 10:36 am)
பார்வை : 116

மேலே