அநாதையானாய்

அநாதையானாய்!
--------------------------
என்றும்அனாதையானாய்!
பெற்றவர் தெரியவிலலை
பராமரித்தவரும் புரியவில்லை
உன்னோட பிறந்தாரெல்லாம்
உரமாக இருக்கையிலே
நீ மட்டும் வாடுவதேன்?

பார்த்தெடுக்கப் பலர் இருந்தும்
பாராமுகம் காட்டுவதேன்
உன்னிலை காணலையே
உடைந்த உனை மாற்றலையே
ஏனென்று புரியலையே!

கிராமத்து வீதியெல்லாம்
கொங்ரீட்டும் காபட்டும்
எங்க நகர மத்தி வீதி இது
ஏங்க இது நரகமாய் மாறிடுத்து

உன்னோட முகம் கண்டு
மாற்று வீதி ஒன்று தேடி
மனம் உருகிப் போறரே
இதுதெரிலையா எம் தலை வேருக்கெல்லாம்

எங்க மனம் தாங்கலையே
ஏங்கும் உந்தன் உளம் கண்டு
எப்ப இந்த நிலை மாறும்
ஏங்க கொஞ்சம் சொல்லுங்களேன்

ஏற ஏணி கொடுத்தாரை
எட்டியே உதைக்காமல்
எழுந்து நிற்க உதவுங்களேன்
அநாதை முகம் பாருங்ளேன்!

எழுதியவர் : ஜவ்ஹர் (14-Apr-15, 1:52 pm)
பார்வை : 155

மேலே