ரணம் மரணம்

ஆருயிர்
என்று
சொல்லாதே
உன்
ஓருயிர்
நான்தானே ~~

இதயத்தை
கிழித்தே
காதல்
என்றாய்
இதனாலே
ஒவ்வொரு
மனதுக்குள்ளும்
வலிகள்
எனும்
விதைகள்
கவிதை
துளிகளாய்
கலக்கப்படுகிறது
காகிதத்தில்~

வாடிய பூக்களும்
வாசனைதான்
காற்றின்
மெல்லிசையில்
சருகாய் உதிர்ந்து
நிழலின் கீழே
அமர்ந்திருக்கும்
காயங்களின்
கன்னி எனை
உரசாது -தனியாக
தலை கவிழ்கிறது -தன்
பிரிவை விட மேலான
வலிகளை தாங்கிய -எனை
விட்டு விலகி ~~

விடியலின் சாபமா
விழிகளை மெல்ல திறந்து
விம்பத்தின் நிழலை
மனச் சாரலில் துவட்டி
நினைவுகளை கூரு போட்டு
கதிர்களாக கண்ணுக்குள்
நுழைந்து ரணமாக மலர்கிறது
சூட்டில் வெந்த புண்ணாய்~~

பொழியும் மழையும்
பூங்கொடி -என்
அழுகையின் அவஸ்தை கண்டு
ஆக்ரோசமாய் அள்ளி நிறைக்கிறது -என்
விழிகளை அடிமையாக்கி
அடிமையினை கரைத்து
சுயம்பாய் தோன்றியவனின் -முன்
நீரோடு நீராய் -என்
கண்ணீரை கானல் நீர் ஆக்குவதற்காக ~~

மெளன பாசையில் உருவான
பிள்ளைத்தமிழ் காதலையும்
சொல்லத் தெரியா குழந்தையாக
மெல்ல வைக்கின்றதே
உவர்ப்பில் முழ்கிய இனிப்பாக
அடி மனதில் காயங்களைத் தேற்றி ~~

இனி ஒரு
பிறப்பு வேண்டாம்
வலி கொண்ட இதயத்திற்கு
ஏனெனில்
ஒவ்வொரு நொடியும்
பிறந்து தான் இறக்கின்றது
அன்பு எனும் முதற்காதல்
உதிர்ந்த பூவாய் ~~

எழுதியவர் : கீர்த்தனா (14-Apr-15, 5:12 pm)
Tanglish : ranam மranam
பார்வை : 172

மேலே