சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மணியண்ணை வழமையாக தேனீர் அருந்தும் கடையில இருக்கும் பொழுது அவ்வழியாக சின்ன பொடியான் வருகிறான்
சின்ன பொடியன் - மணியண்ணே... சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மணியண்ணே - எங்க... இன்னொருதடவை சொல்லு...
சின்ன பொடியன் - உங்களுக்காக ஒருதடைவை என்ன எத்தனை தடவை என்றாலும் சொல்லுவேன்... சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மணியண்ணே - கொஞ்சம் பொறு.... ஒவ்வொரு மாதத்திலையும் வருதாடா?
சின்ன பொடியன் - இதென்ன கேள்வி... சித்திரையில மட்டும் தானே அண்ணே...
மணியண்ணே - அப்போ எதுக்கு 'சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்' என்று சொன்னனி.
சின்ன பொடியன் - (சனியனை வாழ்த்து சொல்லி வாங்கிட்டமோ....) மன்னிச்சுடுங்க அண்ணே... தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மணியண்ணே - ஏன்... தெலுங்கு, கன்னடம், ஹிந்தி... என்று இருக்கா இண்டைக்கு...
சின்ன பொடியன் - மன்னிச்சிடுங்க.... புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மணியண்ணே - இண்டைக்கு என்ன பிறந்த நாள், காலியான வீட்டு நாள்... என்று இருக்கா...
சின்ன பொடியன் - இல்லைண்ணே...
மணியண்ணே - பிறகென்ன...?
சின்ன பொடியன் - வருசப் பிறப்பும் அதுவும்மா எந்த நரி முகத்தில முழிச்சன்னு தெரியல.... உங்களுக்கு போயும் போயி வாழ்த்து சொன்னேன் பாருங்க... என்ர புத்தியை செருப்பலேயே அடிக்கணும்...
மணியண்ணே - கழட்டி தாறதா?
சின்ன பொடியன் கூறிவிடு சென்றான்
கடைக்காரன் - ஏன் மணியண்ணை... வருசப்பிறப்பும் அதுவும்மா விடியக்காத்தாலையே அவனோட விளையாடுறீங்க
மணியண்ணே - அப்போ மத்தியானம் விளையாடலாமா...
கடைக்காரன் - அய்யோ ஆளை விடுங்கடா சாமி....