ஜென்மங்கள் கடந்து வந்துன்னை காதலிக்கிறேன்
தாய் வயிற்றில் சிசுவாய் ஒரு ஜென்மம்
தவழ்ந்து நடந்த குழந்தையாய் மறு ஜென்மம்
பள்ளி பருவத்து பாலகனாய் மற்றொன்று
கல்லூரி கால விடலையாய் இன்னொன்று
காலங்கள் என இதை உலகம் சொன்னாலும்
உன்னை காண காத்திருந்த இது அத்தனையும்
ஜென்மங்கள் என்றே என் மனம் கொள்ளும்
இனியும் எத்தனை கடக்க வென்றாலும்
நிச்சயமாக கடப்பேன் பெண்ணே
ஜென்மங்கள் கடந்து வந்துன்னை காதலிப்பேன் நானே....!!!