நெஞ்சு பொறுக்குதில்லையே-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

தெருவோரங்களில் பேனா
பிடிக்கும் சிறுபிள்ளை,அட்சய
பாத்திரம் ஏந்தி நிற்கிறது.
தாயின் மருமம் சுமக்கும் தாய்ப்
பால் புட்டிகளில் அடைத்து
விற்கப்படுகிறதே! வெள்ளையன்
அணியும் அரைக்கால் டவுசரை
மங்கைக்கூட்டம் நாகரிகமென
மானம் மறைக்க அணிகிறதே!!

பள்ளியோரத்தடியில் இணைய
வியாபாரம் நடக்கும்.அதனருக
கருத்தடை மாத்திரைகள் விற்கும்
சந்தை காணப்படுகிறதே!!

விண்வெளி செல்லும் ஏழை
வீட்டு கல்பனா மேல் படிப்புக்கு
நாதியின்றி உரலும் உலக்கையும்
பிடிக்கிறாள்.இருபத்தியோராம்
நூற்றாண்டின் தகுதியுடைய எடிசன்
கலப்பை பிடித்து செல்கிறான்.

தெய்வமாய் மதிக்கும் வைத்தியன்
படிப்பற்ற பாமரர்களின் திசுக்களை
திருடுகிறான்.நெஞ்சு பொறுக்குதில்லையே..!
என்றே நெஞ்சு பொறுக்குதில்லையே....!!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (17-Apr-15, 11:47 am)
பார்வை : 190

மேலே