நிறமற்ற பிறழ்வுகளின் நீட்சி

கனவுகளில்
எதுவும்
தொடங்குவதும் இல்லை..
முடிவதும் இல்லை..
அது நிறமற்ற
பிறழ்வுகளின்
நீட்சியென
சுற்றிக் கொண்டே
இருக்கிறது
பம்பரம் என்பது
நீங்களாவதும்
அல்லது நானாவதும்
அல்லது பொருளாகவும்
அல்லது கருத்தாகவும்
இல்லாமலும்
போகலாம்...
இயல்பான
கட்டங்களுக்குள்
இயல்பு மீறிய
வட்டங்கள் கொஞ்சம் சதுரம்,
கொஞ்சம் செவ்வகம்..
மீண்டும் ஒரு
புள்ளி நோக்கிய
கூர் நோக்கில்
உங்கள் குறட்டை கூட
உங்களை
எழுப்பி விடலாம்..
எழுவது நீங்களா
என்பது தான் கனவின்
ஆட்சியும்
சூட்சுமக் கனவும்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (17-Apr-15, 11:42 am)
பார்வை : 190

மேலே