கல்விக் கனி
கல்விக் கனியை
கன்னியர் ருசித்துவிட்டால் போதும்
கனியின் வித்து
கன்னியின் சொத்து
கன்னியரே விருட்சங்களாய்
வளர்ந்து கிளைவிட்டு
படர்ந்து ,காய்த்து,கனிந்து
மீண்டும் விருட்சமாய்
கல்வி கனியை வீசி
பாரதத்தை பாரிலே
படிப்பில் உயர்த்திடுவர்!