அப்துல் கலாம்

அறிவியலே!
ஆராயிச்சி நாயகரே!
இராமேஸ்வரம் மண்
ஈன்றெடுத்த
உத்தமரே!
ஊர் மெச்சும்
எங்கள் பொக்கிஷமே!
ஏகபட்ட சொல்லிருந்தும் உனை புகழ,
ஒன்றும் சிக்கவில்லை என் கைவசமே!
ஓயாமல் ஓதும்
ஒளலியாவே...
அப்துல் கலாமே!
ஆற்றலின் புலமே!..எண்பது வயது
இளைஞனே!
நீ வரும் வரை தூக்கத்தில்
மட்டுமே கனவு
உனை அறிந்த பின்பு தான்
எம் பாரத தேசம்
வல்லரசு ஆகும் வரை
கனவில் மட்டுமே என் தூக்கம்!
அது உனை பார்த்துவந்த ஊக்கம்.
பசுமை இந்தியாவே நம் சொர்க்கம்.
அதுவும் உன்னிலிருந்தே தொடக்கம்.
கூடவே
நெஞ்சடைக்குதே துக்கம்!
நீங்கள் இல்லையே எங்கள் பக்கம்!

எழுதியவர் : தேவிபாபு (18-Apr-15, 11:45 am)
Tanglish : apthul kalaam
பார்வை : 3693

மேலே