ஓடிப்போனவள்

//அலமேலக்கா
தெரியுமா சேதி
ராத்திரி மேல வீதி
மொட்டையன் பொண்ணு
கனகம்
பால்காரப் பய கதிரேசனோட
ஓடிப்போயிட்டாலாம்//்
//நிசமாடி....
குனிஞ்சத் தல நிமிராத
பதவிசா இருந்தவளா
இப்படி பண்ணிப்போட்டா?//
// அட ஆமாக்கா
ஊரே சிரிக்குது
ஒன்னுக் கூடிப் பேசுது
இது தெரியாதாவளா
இருக்கீயேக்கா.....
எக்காளமிட்டாள் பூவாத்தாள்//
அன்று ஏரிக் கரையிலும்
குழாயடியிலும்
இப்படியாய் நடந்த
புறணிப் பேச்சு
கால மாற்றத்தில்
பத்திரிகைகளில் பரவி
தொ.கா வில் செய்தியாகி
இன்று நவீன யுகத்தில்
வாட்ஸ் அப்பிலும்
முக நூலிலும்
பகிர்ந்துக் கொள்கிறார்கள்
ஓடிப்போனவள் கதையை...!
அன்று பேசியது
சமூகமாம்
இன்று பேசியது
சமூக வளைத்தளமாம்...!
பிறரின் அந்தரங்கம்
அலசப்பட்டு
புகைபடமாய் எடுக்கப்பட்டு
கோடிப் பேருக்கு
பகிர்ந்தளித்து
லைக்குகளுக்கு
விடப்படும்
இந்த மானமற்ற ஈனச் செயலோ
வலைத்தளப் புரட்சி
அன்று பேசிய
அலமேலு அக்கா
பூவாத்தாப் பேச்சு
அது ஒரே ஊரோடுப் போச்சு
இன்றைய வலைத்தள புரட்சி
உலகம் முழுதும்
வைரசாய் பரவியாச்சு....
இதற்கோ அறிவியல்
இதற்கோ தொழில் நுட்பம்?

எழுதியவர் : சித்ரா ராஜ் (18-Apr-15, 3:04 pm)
Tanglish : odiponaval
பார்வை : 118

மேலே