ஆண் மகன்
ஆண் மகன்
பெண்மையை மதிப்பவன்
பேராண்மை கொண்டவன்
சத்தியம் காப்பவன்
ஜகத்தினை வெல்பவன்
வீரம் உள்ளவன்
வீம்பும் கொண்டவன்
உண்மை மொழிபவன்
ஊருக்கு தலைவன் அவன்
மன திண்மை கொண்டவன்
மானம் உள்ளவன்
ஈரம் உள்ளவன்
மன ஈரம் உள்ளவன்
வலியை தாங்குபவன்
வலிமை கொண்டவன்
காதல் செய்பவன்
காமத்தில் திளைப்பவன்
சந்ததி பெருக்குபவன்
சந்ததி காப்பவன் அவன்
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது
அவன் இன்றி ஒரு கை ஓசை எழுப்பாது
சிவ.ஜெயஸ்ரீ