கவிதை பயணம்

ஐந்தாறு வயதில்
நான் "அம்மா" என்று எழுதியதை
கவிதை என்று எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!!!

காலங்கள் கடந்தோட....

நான் எழுதிய முதல் கவிதையை
மூன்று பேரிடம் காட்ட
மூவரும் முவ்வேறு கருத்து சொல்ல...
உரை நடை என்று ஒருவன் சொன்னான்
இது ஒன்றுமே இல்லை என்றான் ஒருவன்
என்ன யாரையாவது காதலிக்கிறாயா?
என்றான் மற்றொருவன்
ஆம்! காதல் தான் ! கவிதை மீது என்று சொல்ல
அன்று எனக்கு தமிழை கையாள தெரிந்திருக்கவில்லை!

காலங்கள் கடந்தோட...

அவளை நினைத்தாலே கவிதை
கொட்டியது
அவளிடம் காட்டிவிட வேண்டுமென்றே ஐம்பது
கவிதைகள் எழுதி வைத்தேன்!!!
அவள் நிராகரித்த போது
அவைகளை எரித்து வைத்தேன் !!!

காதல் தோல்வியில் தோன்றிய கவிதைகள்
பல!!!
அத்தனையும் அழுது எழுதியவை !!!
எழுதி அழுதவை!!!

ஒரு கவிதை எழுது முடிவதுற்குள்
இன்னொன்று கவிதை பிறக்கும்!!!
வார்த்தைகளோடு விளையாடி
தூங்கி விடுவேன்!!!
சில சமூக விடியலை நோக்கி எழுதும் கவிதைகளில் !!!

காலங்கள் கடந்தோட....

என் பணியை தேடி நான்
பசியோடு அலைந்த நாட்களில்
என் கவிதைக்கு பட்டினி போட்டேன்

தோன்றிய கவிதைகளை
எழுதி வைக்காமல் எகத்தாளம்
செய்தேன் !
கவிதைகள் எனக்கு சோறு போடவில்லை என்ற
ஏக்கத்தால்!
வசதிக்காக வார்த்தைகளை இழந்தேன்!!!

எப்போது நான் கவிதையை மறந்தேன்
அல்லது கவிதை என்னை எப்போது மறந்தது
என தெரியாமல்
காலங்கள் கடந்தோட....

இப்போது
எழுத நினைக்கின்றேன் !!

அத்தனையும் எழுதி விட வேன்றுமென்று
நினைகின்றேன்!
ஆனால் வார்த்தைகள் வசப்படவில்லை!

கவிதைகள் என்னை
ஏளனம் செய்கின்றன
என்னையா மறந்தாய் என்று!!

கடைசி வரி மட்டும் நெஞ்சில் இருக்க
மீதி முதல் வரிகளை தேடுகிறேன் !
அரை குறையாய்
கவிதை எழுதி
முழுதாய் வாழ்வது கடினமாக இருக்கிறது!

இப்போது !
நான் கவிதையை பார்த்து கேட்கின்றேன்
உன்னை நான் கற்று கொள்கிறேன்
என்னை நீ பெற்று கொள்வாயா என்று???!!!

எழுதியவர் : வடிவேல் அயோத்தி (18-Apr-15, 9:55 pm)
சேர்த்தது : வடிவேல் அயோத்தி
Tanglish : kavithai payanam
பார்வை : 108

மேலே