பைத்தியக்கார காதல்
பைத்தியக்கார காதல்
=====================
என்னுடன் செலவிட
உனக்கிருக்கும்
நேரம் போதாமையை
என் கோபங்களால் அன்றி
சொல்லத் தெரியவில்லை
நேரமாச்சு போகின்றேன் என்ற
வார்ப்பதிவானில்
ஒலிப்பதிவு செய்யப்பட்டதுபோல்
மீண்டும் மீண்டும்
ஒலித்து கொண்டிருக்கும்
உன் பிரிவுரையை கேட்கின்றபொழுது
இந்த உலகத்தில்
நீ அனுபவித்துக்கொண்டிருக்கும்
முழுமையான அன்பு
உன் என் இறுதி ஆகிருதிவரையிலும்
என்னுடையதாகமட்டுமே
இருக்கவேண்டும்
நீ விலகுகையில்
உன்னையும் கொன்று
என்னையும் கொன்றிருப்பேன் ம்ம்ம்,,
இரத்தக்காயம்
புறம் தெரியும் அளவிற்கு
என்னிடமிருந்து நேசிக்கக்கற்றுக்கொள்
அனுசரன்