பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் கவிதை

பாரதியின் தாசனெனப் பெயரே பூண்டு
-------பக்குவமாய் நற்கவிதை பலவே தந்த
சீரதிகம் பெற்றோங்கிச் சிறந்து நின்ற
-----சிந்தையமர் பாவேந்தர்ப் பார்வை சொல்வாம் !
பாரதனில் பெண்ணுரிமை வேண்டும் என்றே
-------பரவுபுகழ் தன்கவிதைச் சங்கைக் கொண்டே
ஊர்முழுதும் உலகனைத்தும் உவந்து கேட்க
-------உரத்ததொரு முழக்கமதை ஊரில் கண்டே!


பெண்ணுரிமை பற்றியவர் கொண்ட பார்வை
------ பெருந்தத்துவம் என்றாலும் மிகையே இல்லை ;
எண்ணரிய கருத்துக்கள் இவர்க்கு முன்னே
------எத்தனையோ கவிவாணர் சொன்னார் ; ஆனால்
மண்ணுலகில் பாமரரும் ஏற்கும் வண்ணம்
------மணியான மொழிகொண்டு இவரே சொன்னார் ;
உண்ணுசுவை சொற்களினால் உரைத்த செய்தி
-------உவந்திங்கே விரித்திட்டேன்; கேட்பீர் தானே!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Apr-15, 10:55 am)
பார்வை : 89

மேலே