தோழியின் தேடலில் தோரனை மடல்
தேவதையாக ஒரு தெய்வமகள்
தேவி பெயரில் தேவன்மகள்
தேடுகிறேன் உன்னை
தேவாலயம் முன்னை...
அஷ்ட தோழிகளில்
என் இஷ்ட தோழியை
கஷ்டப்பட்டு கண்டறிந்தேன்
அவள் கடைசியாக நிற்பவள் என்று...
சிவப்பாக உடை உடுத்தி
கருப்பு பெண் ஒருத்தி
தோழியோடு தோல் உரசி
தோரனையாக நிற்கும் அரசி
நீ தானே..?