பொவி தெனம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஏ அக்கா ஏஏஏ....அக்கோவ்...
ஏன்டி இப்பிடி அவயம் போடுத எனக்கு காது வெண்டயமா கேக்குது
அப்பிடி என்ன சொல்லப் போற சொல்லு
அக்கா இன்னைக்கு புவிதினமாம்
அதென்னதுடி பொவி தினம் ஒலகத்துல இல்லாத தினம்
ஆமக்கா அது உலக தினம்தான்
முதல்ல பொவிதினம்ன்ன நான் ஒலகம்னா ஒலக தினம்ங்க
வம்புக்கு இன்னைக்கு உனக்கு வேற ஆளு கெடக்கலையா
ஏலே பேரப்புள்ள யேன் ராசாபுள்ள நீ சொல்லுடா
படிச்ச புள்ளைங்களுக்குத்தான் இதெல்லாம் தெரியும்
பொவி தெனம்ன்னா என்னடா ?
பாட்டி அது பொவி தெனம் இல்ல புவிதினம் தி எர்த் டே
அந்தப் பாட்டி சொன்ன மாதிரி உலக தினம்ன்னும் சொல்லலாம்
கம்பூட்டர்ல டொக்கு டொக்குன்னு தட்டுதயேன்னு ஒன்ன கேட்டா
மளையில கூட பள்ளிக்கூட்த்தில ஒதுங்காத இவ்ளுக்கு வக்காலுத்து
வான்குதையாக்கும் போ..போ சைக்கள எடுத்துக்கிட்டு ஊர சுத்து
சைக்கிளில் இன்று ஊரை சுற்றுவேன்
விமானத்தில் நாளை இந்த புவியை சுற்றுவேன்
ஏன் அதற்கப்பால் அந்த செவ்வாய் கிரகத்தையும் தொட்டு வருவேன்
நீ சிரி... பாத்தியா எப்பிடி கவித படிக்கான்
ராத்திரி பகலா கம்பூட்டர்ல இந்த சோலிதான் நடக்குது
வேற எவனாவது விவரம் தெரிஞ்சவன் வாறானான்னு பாப்போம்
....தொடரும்
~~~கல்பனா பாரதி~~~~