வனம் விதைப்போம்

வனம் விதைப்போம்...!
மரமே...!
மண்ணின் உரம்....!
மழையின் கரம்....!
மனித வரம்....!
மண்ணில் -
அறம் செழிக்க
வேண்டும்....
எனில் -
மரம் தழைக்க
வேண்டும்.....
இனி -
மனித குலம்
பிழைக்க....
தானே -
மரம் முளைக்க
வேண்டும்....
அதில் -
கிளைகிளைக்க
வேண்டும்....
அதுவும் -
விருட்ஷமாய்
நிலைத்து இருக்க
வேண்டும்.....
மரமே...!
மண்ணின் உரம்....!
மழையின் கரம்....!
மனித வரம்....!
அம் மரம் -
துளிர்க்கும் விழுதாக
மனித மனமிருக்க
வேண்டும்....
அதனாலே -
மண்ணுலகு
மறு ஜென்மம்
எடுத்திங்கு...
இயற்கை
வளம் மிகவே
ஓங்கும்...!
மரமே...!
மண்ணின் உரம்....!
மழையின் கரம்....!
மனித வரம்....!
மரம் அறுத்து -
சிரம் கொய்யும்...
தற்கொலைக்
கரம் தடுத்து...
நலம் படைப்போம்...!
நாளும் -
வனம் விதைப்போம்...!
மரமே...!
மண்ணின் உரம்....!
மழையின் கரம்....!
மனித வரம்....!