வாழ்க்கை வலிகள்

பாசத்தின் வலியது புரியும்
அது பாடையிலே
போகையிலேதான் தெரியும் ….!!!
காசு மதிப்பு என்னவென்று ...
நெத்தி பொட்டின்
குத்திகாசு சொல்லும் …!!!
கல்லூரி படிப்பின் அருமை …
உன் இயந்திர
வாழ்க்கையில்தான் புரியும் …!!!
சங்கடம் இல்லா வாழ்க்கை
கோயில் வாசல் வரும்
உன் மனது சொல்லும்….!!!
உள் நாட்டின் தொழில் அருமை ….
வெளிநாட்டில்
தனிமையில் புரியும் …!!!
உடம்புள்ளே இரத்ததின் தேவை …
உனக்கொரு
விபத்தின்போதே புரியும் …!!!
கனவேதும் இல்லாத உறக்கம் …
அது மனம் கொள்ளும்
மகிழ்ச்சியில் தெரியும் …!!!
இறைவனும் அறியாத தத்துவம் …
நீ பிறர் மனம்
புரிந்தபோது பிறக்கும் …!!!
கடைதனில் கிடைக்காது இன்பம் …
உன் உள்ளத்தின்
உள்மனதின் விம்பம் …!!!
காலம் கடந்த பின்
உணர்வதே உன் பிழை….!!
கவலை அது எல்லாம்
நீயே பெற்றுக்கொண்ட பிள்ளை …!!!