துளிப்பாக்கள் - 3

@@@@@@@@@@@@@@@


கதிரவனாகி விடுகின்றன
இரவெல்லாம்

தெருவிளக்குகள்


@@@@@@@@@@@@@@@


கேட்பார் இல்லாமல்
ஓடுகின்றன கண்ணாடிக்குள்

கடிகாரமுட்கள்


@@@@@@@@@@@@@@@


தோள்களில் பிறந்து
தோள்களில் மரணிக்கிறது

வியர்வைத்துளிகள்


@@@@@@@@@@@@@@@


கேளாமல்
தொடர்கிறது

நிழல்


@@@@@@@@@@@@@@@


அறை கிடைக்கிறது
காசு கொடுத்தால்

நட்சத்திர விடுதியில்


@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (23-Apr-15, 2:24 pm)
பார்வை : 119

மேலே