நான் அவள் வான் -கார்த்திகா

சலனமற்ற வான் நீரோடையில்
முகம் பதித்தேன்

மின்னல் பாதி வெட்டி
கண்கள் வெளிச்சத்தில்
குளித்திருந்தது

இடியோசைக்கு அஞ்சி
எந்த நட்சத்திரமும்
இன்று குளிர் காய
வரவில்லை...........

ஒளிந்திருந்த நிலாத் தோழி
முந்தானை முகிலின்
மறைவில் எட்டி நோக்கினாள்..

வீறிட்ட இடி அலறலில்
மழைத் துளிகளின்
சுகப் பிரசவம் ..

புறாக்களின் கொஞ்சுதலில்
இரவு தீர்ந்து விட்டதை
ஏற்று மறைகிறது காரிருள் ..

வானவில்லை வரவேற்க
உதயமாகிறது சூரிய நட்சத்திரம்..

யுகங்களின் கணக்கெடுப்பில்
என்றென்றும் சலனங்கள்
புதைத்தவளாய்
அதிகாலை துகில் எடுத்து
மறைக்கிறாள் வான் தோழி!!

எழுதியவர் : கார்த்திகா AK (23-Apr-15, 4:44 pm)
பார்வை : 97

மேலே