சொல்லின் செல்வன்

நாய்க்குட்டியின்
வாலாட்டத்தில்..
தெரிவது நன்றி
என்றேன்..
மழலையர் பள்ளியில்
நுழைந்திடும்
செல்வனுக்கு..
..
இவர்கள் எல்லாம்
இங்கு ஏன் இருக்கிறார்கள்
வீட்டில் இல்லாமல் ..
என்றான் ..
செல்வன்..
முதியோர் இல்லத்தை காட்டி!

*******
பொம்மைக் கார் இரண்டு
வாங்கி வந்தேன்..
இதில் ஒன்றை
தூரத்தில் இருந்தே
இயக்கலாம்
என்றேன்..
செல்வனிடம்..!
...

அம்மாவை பார்க்க
ஊருக்கு
இந்த மாதமும்
போய்த்தான் ஆக வேண்டுமா..
என்று கணவனிடம் சப்தமிடும்
எதிர் வீட்டு பெண்ணை
ஏறிட்டுப் பார்த்தான்
செல்வன்..
கார் அவனுக்கு
ஏனோ பிடிக்கவில்லை!

****

பூப் பறித்தான்..
ஸ்..ஆ ...என்று துடித்தான்..
முள் குத்தி விட்டதா
என்றேன் ....
ஊஹூம் ..
முள்ளில் கை
வைத்து விட்டேன் என்றான்..
...
கற்கிறேன்..
இன்னும் ..
சொல்லின் செல்வனிடம் !

********



***

எழுதியவர் : கருணா (23-Apr-15, 4:25 pm)
Tanglish : sollin SELVAN
பார்வை : 131

மேலே