உறக்கமின்மை

இரவுப்பணி,

அலுவலக வண்டியில்
போட்ட
அரைமணிநேரத் தூக்கம்,

மலையாளத்தான்
கடையில் குடித்த
இஞ்சி டீ ,

பார்சல் மெதுவடையின்
அதிகப்படியான
எண்ணெய் ,

ஒருமணிநேரம் புரிந்த
தொலைக்காட்சித் தவம்,

மின்விசிறி கடத்தும்
கான்க்ரீட் வெக்கை,

சமைக்கும்
அறைநண்பனின்
பாத்திர உருட்டல்கள்,

பக்கத்துக் கட்டிடத்தின்
கொத்துவேலை இரைச்சல்கள் ,

அவ்வப்போது
வீறிடும்
அலைபேசி,

அறிவிக்கப்படாத
மின்வெட்டு,

- என
இவ்வாறாக
படம் வரைந்து
பாகங்கள் குறிக்கிறேன்
எனது உறக்கமின்மையின்
குறுக்குவெட்டுத் தோற்றத்தை ...............!

எழுதியவர் : குருச்சந்திரன் (23-Apr-15, 4:05 pm)
பார்வை : 131

மேலே