கலாபம்

அணுவிலும்
நுழையப்பார்க்கும்
நரிகள்
கூட்டத்தின்
மத்தியில்
மண்டியிட்டுக்கிடக்கிறது
கலாப மயில்....

எத்தனை
காலத்திற்கு
காலுடைத்து
ஆட விடும்
இவ்வுலகம்....

யார் யாரோ
வந்து
தடவிக்கொடுக்கிறார்கள்
யாரென்றுதான்
தெரியவில்லை....

இங்கு சிலர்
கடலையும்
காய வைத்து
உப்பளமாக்கும்
முயற்சியில்
முன் நிற்கின்றார்கள்....

இன்னும் சிலர்
கோழிகள்
மதில் மீதேறி
முட்டையிடுகிறது
என்று
கூவித்திரிகிறார்கள்.....

பணத்தை
மணம் முடித்த
சிலர்
சிக்கனத்திடம்
பிச்சை பாத்திரம்
ஏந்தி நிற்கின்றார்கள்.....

இருட்டு உலகத்தில்
குருட்டு பேய்கள்
கோட்டான்களுடன்
தாயம் உருட்டுகின்றன.....

சில கொடிய
விஷமுள்ள
செல்லப்பிராணிகள்
வீட்டுக்குள்ளேயே
விஷம் வளர்க்கின்றன....

தூங்கிக்கிடக்கிறது
மயிலென்று
அழகு இறகு
பிய்த்தெறிய
சந்தர்ப்பம் தேடியலைகின்றன....

அடங்கிப்போன
காலம் கடந்து
ஆட்டிப்படைக்கும்
காலம்
கனிந்துவிட்டது.....

இறக்கம்
இல்லாதவனுக்கு
பிறப்பு எதற்கென்று
சரித்திரத்தில்
சட்டம்
பிறக்கட்டும்....

விகார வடிவம்
பூண்ட
அகோர கூட்டத்தில்;
அடங்கிப்போன கலாபி
தன் கலாபம் விரித்து
ருத்ர தாண்டவமாடும்....

இனி
அடைமழை
பெய்யும் வரை
காத்திருக்கப்போவதில்லை......

எழுதியவர் : ம.கலையரசி (23-Apr-15, 5:27 pm)
பார்வை : 118

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே