பிரிவு

பிரிவு

இந்த கல்லூரி ........
குளத்தில் கல்விதாகம்
தீர்த்துவிட்டு .....
வேறு இடம் நோக்கி
பயணிக்கும்
வேடந்தாங்கல் ...
பறவைகளே .....
வாடிக்கையாய் -நாம்
வந்துபோன இடங்களல்லாம்
தேடி பார்க்கிறேன் ....
மனம் வேதனையில்
வெந்து மடிகிறது
ஒரு தாயின் வயிற்றில்
நாம் ஒன்றாக பிறக்கவில்லை
அண்ணன் தம்பியாய்
அக்கா தங்கையாய்
பேசிய இடங்கல்ள்ளலாம்
தேசிய சின்னமாய் ...
சித்தரித்து பார்கிறேன் ....
ஒரே வகுப்பில் ....நாம
ஒக்காந்து படிச்சதுக்கு
என்ன புண்ணியம்
இப்பிறவில் செய்தோமே
தாயின் கருவறையில்
தங்கிருந்த நாட்களைவிட
கல்லூரி வகுப்பறையில்
வந்துபோன நாட்கள்
அதிகம் .......
மரணத்தைக்கூட.........
நான் மகிழ்ச்சியாக
ஏற்றுகொள்வேன்
இந்த தருணத்தை ......என்னால்
தாங்கிகொள்ள முடியவில்லை .......


இரா .மாயா

எழுதியவர் : இரா .மாயா (23-Apr-15, 9:18 pm)
சேர்த்தது : மன்னை மாயா
Tanglish : pirivu
பார்வை : 95

மேலே