அன்பின் மொழி என் தந்தை

உங்களது பார்வை..
என் முதல் வெளிச்சம்!
உங்களது வார்த்தை..
என் முதல் படிப்பு!
தாய் மடியும் மறந்தது
உங்களின் மார்பை கண்டு..
அவள் ஊட்டிய அமுதும் தோற்றது
உங்களின் அன்பை கண்டு..
விடியல் இல்லா இரவுகள் வேண்டும்..
உங்களின் தோள்களில் தூங்க..
முடிவில்லா உங்களின் அன்பு வேண்டும்..
மீண்டும் உங்களின் மகளாய் பிறக்க..
என் ஆதியும் அந்தமுமாகி..
தாயும் தந்தையுமாகி நிற்கும்
என் தாயுமானவா இது உனக்காக..

எழுதியவர் : நந்தினி பிரதீவ் (24-Apr-15, 12:11 pm)
பார்வை : 241

மேலே