இப்பொழுது
உண்மையை தேடி பார்த்தேன்
இப்பொழுது,
நீதி மன்றங்களில் கூட கிடைப்பது இல்லை
காதல் என்ற சொல்
இப்பொழுது,
கல்யாணம் வரை செல்வது இல்லை
தூய்மையான தண்ணீர்
இப்பொழுது,
நீர்நிலையங்களில் கூட இல்லை
தமிழை படிக்க வேண்டும் என்ற எண்ணம்
இப்பொழுது,
அதிகரிக்க வில்லை
பெற்ற குழந்தையை பேணிகாக்க
இப்பொழுது,
பெற்றோருக்கு நேரம் இல்லை
மனிதாபிமானம் என்ற சொல்
இப்பொழுது,
வார்த்தைகளில் கூட இல்லை
அன்னதானம் என்ற வார்த்தை
இப்பொழுது,
சமுதாய கூடங்களில் இல்லை
அமைதியை தேட நினைத்தேன்
இப்பொழுது,
இரவிலும் கூட கிடைப்பதில்லை
இப்படி
உண்மை,
பாசம்,
தண்ணீர்,
உழைப்பு,
காதல்,
இவை அனைத்தும் குறைந்து கொண்டே போகும் போது ..........................
இந்த உலகம் மட்டும் எவற்றை நோக்கி நகருகிறது........................