யார் நீ

உன்னைக் காணாமல் ஒட்டிக் கொண்டன;
உதடும் நாக்கும் .

உனக்னைக் காணாமல் நழுவுகிறது ஆடை;
விழிகள்
பிதுங்குகின்றன;
உடல் மெலிகிறது;
தலை கொதிக்கிறது உஷ்ணத்தால்...

உன்னைக் காணாமல் கால்கள் முடமானது;
கைகள் இடமாறியது;
நான் பித்தனாகவுமில்லை
சித்தனாகவுமில்லை
நான் யாரென்ற கேள்வி எனக்கே வந்தபின்பு -நீ கேட்பதில் வியப்பில்லை;
'யார் நீ ?' எனக் கேட்பதில்...!

எழுதியவர் : சுபா.மலைராஜ் (25-Apr-15, 4:25 pm)
பார்வை : 79

மேலே