காதலிக்கு ஒரு கவிதை

என் காதலிக்கு நான் எழுதும் காதல் கவிதை,.

ஆறு மணிநேரம் சிந்தித்தேன்
அரைவார்த்தை கூட தெரியவில்லை,

பகல் முழுவதும் சிந்தித்தேன்
பாதி வாரி கூட முடியவில்லை.

இரவின் நித்திரை கலைத்தேன்
இறவல் கவிதை கூட கிடைக்கவில்லை.

பெருமூலை சிறுமூலை கூட காதல் கொண்டுவிட்டது.
வார்த்தைகளை தூலாவும் நேரத்தில்.

விரலும் பேனாவும் கூட உறவு கொண்டுவிட்டது வரிகளுக்கு
தினறும் நேரத்தில்.

வெள்ளை காகிதம் கூட எலலம்
பேசுது இவன் கவிஞனா என்று.

அஞ்சல் தலையோ படிபறிவு இல்லாதவன் என்று அரசாங்க முத்திரையிட வேண்டுகிறது.

எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லையா இல்லை
வார்த்தைகளே இல்லையா.

ஒன்று மட்டும் உண்மை காதலியே
நான் உன்னை காதலிப்பது.


- கி. சிவா

எழுதியவர் : கி. சிவா (25-Apr-15, 10:07 pm)
பார்வை : 309

மேலே