என்னவள் 2-- அர்ஷத்
நீதானடி நான் கண்ட பாதை
இதுவரை காணாத கவிதை ....!!!!
என் வாழ்வெனும் நாடகத்தில்
நுழைந்தாய் புது பாத்திரமாய்
என் உயிரில் உன்னை
ஊற்றினேன் பத்திரமாய்
உனை பார்த்து ரசிப்பேன் சித்திரமாய் .....!!!
பூவை தேடிதானே தென்றல் வரும்
உனைதேடி தென்றல் வந்ததேன்
சக்கரை தேடிதானே எறும்பு போகும்
உன்னை தேடி எறும்பு வந்ததேன் ...
பழத்தை தேடும் கிளிகள்
உன்னை தேடுவதேனடி .
நீ பழ ஜாதி யினாலா இல்லை
கிளி ஜாதி யினாலா ......
கிளி பேசும் என்று தெரியும்
வெட்கப்படும் என்று கண்டுகொண்டேன் இன்று ....
பூவிதழ் கசக்கும் என்று நினைத்தேன் ..
இனிக்கும் என்று ஈக்கள் உனை மொய்த்த போது அறிந்தேன் .....!!!
பனி குளிர்வதுபோல்
அவள் ஒருத்தி (ஒரு தீ) தான் குளிரு(வாள்)ம் ....!!!