ஒரு ரோஜா போதும் 2

ஒரு ரோஜா போதும் (2)
===============================================ருத்ரா

"ணங்கென்று" சத்தம்
ரோஜாவைத்தான் எறிந்தாய்
என் இதய தடாகத்தில்...அது
மன்மதன் வீசிய "விண்கல்"

இதழ் இதழ்களாய்
இத்தனை அடுக்கு ஆடைகளா?
அவிழ்ந்து விடப்போகிறதே என்று
பட்டாம்பூச்சிக்கும் வெட்கம்.
அதில் கால் வைக்க.

ஒரு தடவை தான் சிரித்தாய்.
கீழ் கவிழ்ந்து ......
உள்ளே
"நேபாளங்களுக்குள்" நான்.

ரோஜாப் பூவே
உனக்கு தூது விட வண்டுகள் வேண்டும்
என்னை ஒரு தடவைப்பார்த்து விடு
அந்த வண்டுகள்
இங்கு வந்து சேரட்டும்.

பூகம்பம்
பெரும்புயல்
ஆழிப்பேரலை
கடல் கோள்
எல்லாம்...
".பேரிடர்" என்று பெயர் சூட்டினார்கள்
பேரிடல் தெரியாதவர்கள்.
எல்லாம் சேர்த்தால்
அது தானே இங்கே
"காதல்"

======================================================
.

எழுதியவர் : ருத்ரா (26-Apr-15, 11:38 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 60

மேலே