இன்றைய பிரார்த்தனை

சந்திக்கும் நோக்கில் சன்னிதி முன்னே
வந்திங்கு நிற்கிறோம்
பந்திக்குள் சேர்த்துப் பயனுற வாழப்
பார்த்திட வேண்டுவோம்!

எரி,நெருப் பாகச் சுய,நலம் என்னுள்
இருப்பதை அறிவீரே?
கரி,நெருப் பாக வந்தெனுள் அதனைக்
களைந்திடப் போவீரோ?

ஏதும் இலாத கடலினின் மீன்கள்
எடுத்திடச் செய்தீரே!
தீதை எனக்குள் திருத்திப் போடத்
திரும்பியும் பாரீரோ?
========= ==========

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (27-Apr-15, 7:34 am)
பார்வை : 490

மேலே