கூண்டுக்கிளியாய் அம்மா

அம்மாவை ஊருக்கு
அழைத்துவர மனமில்லை!
ஊரிலிருந்து கிளம்பும்போதே
உற்சாகத்தை மூட்டை கட்டிவிடுகிறாள்!
கூண்டுக்குள் சிக்கிய கிளியாய்
மனது தவிழ்த்து போகிறாள்!
ஓடியாடி உழைத்த கால்களுக்கு
ஒடுங்கிக்கிடக்க மனமில்லை போலும்!
அம்மா வந்திருந்த இந்த
ஓரிரு நாட்களில் சீக்கிரமே
வந்துவிடுவேன் வேலையிலிருந்து!
அவ்வப்போது நச்சரித்தே
இருப்பாள் ஊருக்கு
வழியனுப்ப சொல்லி!
அம்மா நான் எப்படி சொல்வேன்
எனக்கும் இங்கு பிடிக்கவில்லை
உன்கூடவே வருவேனென்று!
உனக்கு பிடிக்காக நகரத்தில்
நானும் சகித்துக்கொண்டிருக்கிறேன்
!
இப்போதே கிளம்பிவிட்டேன்
சொந்த ஊரைநோக்கி!
இப்போதைக்கு அம்மாவை
மட்டும் வழியனுப்ப!

எழுதியவர் : காமராசன் மண்டகொளத்தூர் (27-Apr-15, 7:51 pm)
பார்வை : 65

மேலே