பல்கலைக்கழக மலையக சமூக தேசியமாநாடு 2015

பல்கலைக்கழக மலையக சமூக தேசியமாநாடு 2015

மலையக சமூகத்தில் பின்தங்கியதொரு நிலையில் காணப்படும் கல்விச் சூழலை சீர்திருத்தும் நோக்குடன் பல்கலைக்கழக மலையக சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டஇ பல்கலைக்கழக மலையக சமூக தேசியமாநாடானது 2015.04.11ஆம் திகதி சனிக்கிழமை அன்று ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. “உயர்கல்வியில் மலையக சமூகத்தின் பங்கேற்பு: எதிர்பார்ப்புக்களும் சவால்களும்” என்றத் தொனிப்பொருளின் கீழ் இத்தேசிய மாநாடானது இடம்பெற்றது. பல்கலைக்கழக நுழைவில் பின்தங்கியதொரு சமூகமாக காணப்பட்ட மலையக சமூகத்தின் பிரச்சனைகளையூம் பின்னடைவூகளையூம் இலங்கை முழுவதும் உள்ள இலங்கைவாழ் இந்தியத் தமிழ் சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களுக்கும் எடுத்துரைக்கும் முகமாக இம்மாநாடு நடாத்தப்பட்டது.
இலங்கை பல்கலைக்கழக முழுமலையக சமூகத்தினரும் இம்மாநாட்டை நடத்துவதற்கு உறுதுணையாகவூம் தூண்டுகோலாகவூம் இருந்தனர். மலையகத்தில் சமூகஇ அரசியல்இ பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக மலையக மாணவர்கள் மற்றும் விரிவூரையாளர்கள் பெறுகின்ற மதிப்பைஇ ஓர் கணிப்பீட்டுத் தரவாகக் கொண்டு இம்மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது. பேராசிரியர் எம்.சின்னத்தம்பிஇ பேராசிரியர் சொ.சந்திரசேகரம்இ கௌரவ அமைச்சர் வடிவேல் சுரேஸ் தமிழ் கல்வி அமைச்சர் ஊவாமாகாணசபைஇ கௌரவ அமைச்சர் ராம் தமிழ் கல்வி அமைச்சர் மத்திய மாகாணசபைஇ கௌரவ அமைச்சர் வீ.எஸ். இராதாகிருஸ்ணன் இராஜாங்க கல்வி அமைச்சர் இலங்கை மத்திய அரசாங்கம்இ கல்வி பணிப்பாளர் (கண்டி) மலையக பாடசாலை அதிபர்கள்இ; ஆசிரியர்கள்இ பல்கலைக்கழக மாணவர்கள் விரிவூரையாளர்கள்இ கல்விசார் உதவியாளர்கள் மற்றும் கல்விசார் நலன் விரும்பிகள் முதலியவர்களும் இம்மாநாட்டிற்கு வருகைத் தந்திருந்தனர்.

முதலாவதாக இம்மாநாட்டில் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரால் வழங்கப்பட்ட அறிமுக உரையானது மலையக சமூகம் உயர் கல்வியில் பெற்றிருக்கின்ற இன்றைய நிலையையூம் இந்நிலையை அடைவதற்கான காரணத்தையூம் உதிரிகளாக சிக்குண்ட மலையக சமூக மாணவர்கள் கொள்ள வேண்டிய சமூக அக்கறைப் பற்றியூம் தன் சமூகத்தின் மீதான கண்ணோட்டம்இ தௌpவூ ஏற்பட வேண்டிய அவசியம் பற்றியூம் எடுத்துக் கூறப்பட்டது. இம்மாநாட்டில் மலையக சமூகத்துக்காக ஒன்றுகூடலொன்று இடம்பெற்றமைக்கு காரணம் ஏனைய சமூக மாணவர்களோடு ஒப்பிடும் போது உயர் கல்வி என்ற ரீதியில் மலையக மாணவர்கள் தாம் கொண்டிருக்கும் கல்விசார் அசைவியக்கம் என்பது தன்னளவில் ஒரு துரித மாற்றத்தை ஏற்படுத்துவதில் தாமதம் கொள்வதனாலேயே ஆகும். இத்தாமதத்திற்கு காரணத்தை தேடுகின்ற போது éரண சமூக வளர்ச்சியின்மையே இதற்கு காரணம் என்ற உண்மை வெளிக்கொணரப்பட்டது.
அறிவூப் பொருளாதாரம் என்பது இன்றைய வளர்ச்சியடைந்து வருகின்ற சமுதாயத்தின் ஓர் ஆக்கக் கூறாகவூம் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகவூம் உள்ளது. அந்தவகையில் மலையக சமூகத்தின் அறிவார்ந்த பொருளாதாரத்திற்கான முன்வைப்பானது அறிவை உருவாக்கல்இ அறிவை உள்வாங்கள்இ அறிவை உற்பத்தி செய்தல்இ அறிவைப் பரப்புதல் என்றத் தளங்களில் பிரதியிட்டு நோக்கும் போது அதன் பிரதிபலன் மிகக் குறைவாகவே காணப்பட்டது. ஆகவே மலையகக் கல்வியின் குறைபாட்டிற்கான காரணத்தை தேடிஇ அதற்கான தீர்வை கொள்கையாக பிரகடனப்படுத்துவதே இம்மாநாட்டின் இலக்காக இருந்தது.
அந்தவகையில் “மலையக மாணவர்களின் க.பொ.த தர உயர்தர அடைவூகளும் எதிர்நோக்கும் பிரச்சனைகளும்” என்ற கருப்பொருளின் கீழ் திரு.எஸ்.சதீஸ் மேலதிக கல்வி பணிப்பாளர் (மத்திய மாகாணசபை கண்டி)முன்வைத்த கருத்துக்களை நோக்குகின்ற போது மத்திய மாகாணத்தில் கடந்த 5 வருடகால தரவூகளின் படி 2010ஆம் 161 மாணவர்களும்இ 2011ல் 188 மாணவர்களும்இ 2012ல் 201 மாணவர்களும்இ 2013ல் 231 மாணவர்களும்இ 2014ல் 251 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவூ செய்யப்பட்டனர். அதிலும் உயிரியல்இ பொறியியல்இ தொழிநுட்பம் ஆகிய துறைகளுக்கு உள்வாங்குகின்ற மாணவர்களை விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் அவர்களின் எண்ணிக்கை வீதம் அமையப்பெற்றுள்ளது. இச்சூழ்நிலையை மாற்றியமைக்கக் கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையூடனான இலக்கும் இம்மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறாக மலையக மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவில் ஏற்பட்ட பின்னடைவூக்கான காரணத்தை மாநாட்டில் ஆராய்கின்ற போது ஆசிரியர் இன்மை அதிலும் குறிப்பாக விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறைஇ போதிய வசதியூடன் கூடிய விஞ்ஞான ஆய்வூகூடங்கள் இன்மைஇ பாடசாலைகளில் பொருளாதார காரணிகளால் இடைவிலகும் மாணவர்களின் அதிகரிப்பு வீதம்இ உயர்கல்வி தொடர்பான நுண்ணறிவின்மைஇ பாடங்களை தெரிவூசெய்வதில் செல்வாக்கு செலுத்தும் சமூகஇ பொருளாதார காரணிகள் முதலிய இன்னோரன்ன பிரச்சனைகளும் மாநாட்டில் பேசப்பட்டன.
மேலும் “மலையக புத்திஜீவிகளின் இன்றைய நிலைமைகளும் சமூகப் பொறுப்புடைமைகளும்” என்ற கருப்பொருளின் கீழ் இ.ரமேஸ் விரிவூரையாளரால் (பேராதனை பல்கலைக்கழகம); பகிர்ந்துக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் மலையக மாணவ சமூகத்தையூம் தாண்டி பேராசிரியர்கள்இ விரிவூரையாளர்கள் என்ற கட்டமைப்பின் கீழ் ஆராயப்பட்டது. அந்தவகையில் மலையக பேராசிரியர்கள் மற்றும் விரிவூரையாளர்களின் எண்ணிக்கையை (மொத்தமாக 20 விரிவூரையாளர்கள்) ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மதிப்பிடும் போது நம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகளின் வருகையூம் பின்தங்கியதொரு நிலையிலேயே உள்ளது என்பதைக் காட்டியது. மேலும் இம்மாநாட்டின் மூலம் பல்கலைக்கழக மலையக சமூகத்தினரை ஒன்றிணைப்பதற்கான காரணம் என்ற ரீதியில் ஆராய்கின்ற போது ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவர்களும் தாம் சார்ந்த பல்கலைக்கழகங்களில் எதிர்நோக்கும் பிரச்சனையை அரசியல் பிரதிநிதிகளுக்கும் நமது சமூகம் சார்ந்த மக்களுக்கும் அறிவித்து அப்பிரச்சனைக்கான தீர்வை சட்டéர்வமானதொரு முறையில் பெற்றுக்கொள்வதை நோக்காகக் கொண்டிருந்தனர்.
இம்மாநாட்டின் எதிர்கால எதிர்பார்ப்பு என்றவகையில் பல்கலைக்கழக மாணவர்கள்இ விரிவூரையாளர்கள்இ பாடசாலை ஆசிரியர்கள்இ க.பொ.த உயர்தர மாணவர்கள் ஆகியோர்களுக்கிடையிலான ஓர் வலைப்பின்னலை ஏற்படுத்துதல்இ பல்கலைக்கழகத் தெரிவில் மலையக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தல்இ எதிர்காலத்தில் சிறந்ததொரு மலையகக் கல்வி பாரம்பரியத்தை உருவாக்குதல் முதலிய நோக்குகளைக் கொண்டு செயற்படவூள்ளது.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு பல்கலைக்கழகம் சார்பாகவூம் ஒவ்வொரு மலையக மாணவனும் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை முன்வைத்தனர். அந்தவகையில் மலையக மாணவர்களை பல்கலைக்கழகங்களில் அடையாளம் காண்பதில் ஏற்படும் சிக்கல்கள்;இ பல்கலைக்கழகம் சார்ந்து நிகழ்த்தப்படும் நிகழ்வில் மலையக மாணவர்களின் பங்கேற்பு தடைப்படல்இ பல்கலைக்கழக மலையக மாணவர்களுக்கும் மலையக பல்கலைக்கழக கல்விமான்களுக்கும் இடையிலான தொடர்பு இருமுனையாக இருத்தல்இ இனம் என்ற ரீதியில் மாணவர்கள் பின்தள்ளப்படல்இ ஆங்கிலமொழி மூலம் கற்பதில் ஏற்படும் பிரச்சனைகள்இ தோட்டத்தொழிளாலர்களின் பிள்ளைகள் என்ற ரீதியில் காட்டப்படும் வேறுபாடுகள்இ கல்விசார் நடவடிக்கைகளில் ஈடுபடாத பெற்றௌர்களை பின்புலமாகக் கொண்ட மாணவர்கள்இ வெளிவாரீயான மேலதிக அறிவூசார் புலங்களை பெறுவதிலுள்ள பிரச்சனைகள்இ பல்கலைக்கழகங்களில் ஓர் ஆய்வாளனாகப் பங்கேற்பதில் உள்ள சிக்கல்கள் முதலிய பல பிரச்சனைகள் மாணவர்கள் சார்பில் மாநாட்டில் பேசப்பட்டன.

மலையகத்தில் கல்விசார் யூவதிகளை ஒன்றுதிரட்டுவதற்கான ஒரு தளமாக இத்தேசிய மாநாடானது அமையப்பெற்றிருந்தது. மலையக சமூகத்தைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இச்செயற்திட்டத்தின் முதல் தடமானது மலையக கல்வி பாரம்பரியத்தை பிறிதொரு தளத்திற்கு கொண்டு செல்லப்படவூள்ளதை தீர்க்கதரிசனமாகக் காட்டுகின்றது. இலங்கையை பொருத்தவரையில் மலையக கல்வி பாரம்பரியத்தின் காலஎல்லை அண்மை நூற்றாண்டையே காட்டுகின்றது. ஆனாலும் இன்று வளர்ந்து வருகின்ற கல்வியூகத்தில் பயணம் செய்வதற்கு எம்மை தயார்படுத்தல் இன்றியமையா செயலாகும்.; பல்கலைக்கழக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இம்மாநாடானது மலையக கல்விக்கு தூணாக இருந்து மலையக கல்வி கட்டடத்தை அமைக்க வழிகாட்டுவதாக இத்தேசிய மாநாட்டின் செயற்பாடுகள் அமையவூள்ளன.

அந்தவகையில் மலையகத்தை சார்ந்த மாணவர்கள் விரிவூரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கிடையில் ஒரு சமூக வலைப்பின்னலை ஏற்படுத்தல்இ அவர்கள் மூலமான சமூக பங்காற்றல்களை விஸ்தரித்தல.; இலங்கை பல்கலைகழகங்களிலுள்ள மலையக பட்டதாரி மாணவர்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படடுத்தலஇ; சமூக தொடர்பாடலை ஊக்குவித்தல.; உயர் கல்வி தொடர்பாக மலையகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்தலஇ; இன்றைய அடைவூகளை சமூகமயபப்படுத்தலும் எதிர்கால மேம்பாட்டுக்கான செயற்பாடுகளை இனங்காணுதலும். இலங்கை உயர்கல்வி முறைமையில் மலையக மாணவர்களின் பிரதிநிதித்துவ வகிப்பாட்டை மலையக சமூகத்திற்கு எடுத்துணர்த்தல். மலையகத்தை சார்ந்த பட்டதாரிகள் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் போது அவர்களுக்கான பல்துறைசார்ந்த உயர் தொழில்களை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்தலும் மலையக சமூகம் சார்ந்த தொழில் அதிபர்களுடன் இது தொடர்பான ஓர் இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை தேடுதலுமாகும்.
மாநாட்டிற்கு வருகைதந்திருந்த அரசியல் பிரதிநிதிகளுமஇ; மலையகத்தில் உயர்கல்வி தொடர்பாகக் காணப்படும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்வூகளை எடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியூள்ளதாகவூம் இத்தேசிய மாநாட்டின் நீட்சி அம்முயற்சியினை வெற்றிகரமாக்குவதற்கு உறுதுணையாக அமையூம் என்றும் கூறினர். மலையகத்திற்கான பல்கலைக்கழக கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் என்பவற்றின் தேவையையூம் இம்மாநாட்டில் திரு.எம்.வாமதேவன் (ஆலோசகர்இ தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு கொழும்பு) வலியூறுத்தியிருந்தார். ஆனாலும் அதிலுள்ள பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடும் போதுஇ இவ்வாறு உருவாக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கான மலையக மாணவ நுகர்வை அதிகரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை செய்தல் வேண்டும் என்ற கருத்தையூம் முன்வைத்தார்.
இம்மாநாட்டிற்கு வருகைத் தந்திருந்த மலையக கல்விசார் சமூகத்தினரிடமும் அரசியல் பிரதிநிதிகளிடமும் இத்தேசியமாநாட்டின் ஏற்பாட்டுக்குழுஇ பல்கலைக்கழக மலையக சமூகத்தினரின் இம்முதலாவது தேசிய மாநாட்டில் பல்கலைக்கழக மலையக சமூகத்தினருக்கிடையில் வலைபின்னல் மற்றும் தேசிய அமைப்பொன்று அவசியம் என்றுக் கூறி இம்மாநாட்டிற்கு வருகைத் தந்திருந்த மலையக கல்விசார் சமூகத்தினரிடமும் அரசியல் பிரதிநிதிகளிடமும் ஒப்புதலை பெற்றுக்கொண்டது.
இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட பேராசிரியர் எம்.சின்னத்தம்பிஇ பேராசிரியர் சொ.சந்திரசேகரம் போன்றவர்கள் இத்தேசிய மாநாட்டின் உருவாக்க பணியின் அத்தியாவசியத் தேவையை எடுத்துரைத்துஇ மலையக சமூகத்தினருக்கான அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் இம்மாநாட்டின் செயற்பாடுகள் ஒரு சங்கிலித்தொடர் போல் அமையவேணடு;ம் என்றும் கூறி அதற்கான வழிமுறைகளையூம் முன்மொழிந்தனர்.
மாநாட்டின் இறுதி நிகழ்வாக கலந்துக்கொண்ட பேராசிரியர் எம்.சின்னத்தம்பிஇ பேராசிரியர் சொ.சந்திரசேகரம் போன்றவர்களுக்கான பாராட்டு விழாவூம் கௌரவிப்பு நிகழ்வூகளும் மாநாட்டின் ஏற்பாட்டுக்குழுவால் (பேராதனை பல்கலைக்கழகம்) நிகழ்த்தப்பட்டன. இத்தேசிய அமைப்பின் இலக்கு முதலாவது தளத்தில் தடம் பதித்ததை மாநாட்டிற்கு வருகை தந்திருந்தவர்களின் பதில்களும் பதிவூகள் புலப்படுத்தின.
பா.காயத்திரி
4ம் வருடம்
பேராதனை பல்கலைக்கழகம்.

எழுதியவர் : பா. காயத்திரி (28-Apr-15, 12:01 pm)
பார்வை : 153
மேலே