நாமெல்லாம் மனிதர்களா

கழுதை போல் பாரம் சுமந்து
குதிரை வேகத்தில் ஓடும்
தந்திர நரிகளே.....!

குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான்
ஆனால், இன்னும்
குரங்காகவே தான் இருக்கின்றான்

வாய்ப் புற்றுக்குள் இருக்கும்
சிவப்பு நாகமோ...
வார்த்தைகளால் பலரை
கொத்திக் கொண்டு தான் இருக்கின்றது

நன்றியுள்ள நாயாய் இருக்க நினைத்த மனமோ....!
சாகும் வரை,
வெறி பிடித்த நாயாகவே
உயிர் வாழ்கின்றது

நிறம் மாறும் பச்சோந்திகளை விடவும்,
குணம் மாறும் பச்சோந்திகளே அதிகம்.....

காந்திப் படம் போட்ட,
காகிதத்தின் மேல் தான்,
அட்டையாய் ஒட்டிக்கொண்டிருக்கின்றது
ஆசை....

நீரிலும் நிலத்திலும் வாழும்
தவளையை போல,
இன்பத்திலும் துன்பத்திலும்
வாழ கற்றுக்கொள்

உழைப்பினை எறும்பிடமும்,
ஒற்றுமையை காகத்திடமும்,
கற்றுக்கொள்ளாத நாம்...
ஆறறிவு படைத்த மனிதன் என்று சொல்வதில் வெட்கப்பட்டுத்தான் ஆக வேண்டும்.....

எழுதியவர் : அகத்தியா (30-Apr-15, 4:09 am)
பார்வை : 83

மேலே