விளக்கு வைத்த நேரத்திலே

விளக்கு வைத்த நேரத்திலே...!

பாருக்கு -
பகல் பொழுதாய்
பரிதி யெனும்
கதிர் விளக்கு...!

இரவுக்கு -
உறவான இருள்
விலக, எழில் கூட்டும்
மதி விளக்கு....!

ஆன்மா -
லயமாக, ஆலய...
தெய்வம் தனை -
காட்டும் சீரான
அகல் விளக்கு...!

திக்கு -
திசை தேடும்
நாவாய் தம்மை
தக்க கரை சேர்க்கும்
கலங்கரை விளக்கு...!

மங்கையர் -
தம் மனை வாழ
மகிழ்ந் தேற்றும்
காமாட்சி திருவிளக்கு...!

சீமத் -
தண்ணியிலே...
செம்பொன்னாய்
ஒளிர்ந்திடுமே
சிம்னி விளக்கு...!

அடை மழை -
இராத்திரியின்
ஊதல் காற்றினிலும்....
அணையாத -
வழித் துணையாய்....
அரிகேன் யெனும்
இலாந்தர் விளக்கு...!

தன் -
மெய் யுருக
நெய்யாகி...
மேதினிக்கு
ஒளி காட்டும்...
மெழுகு விளக்கு....!

விசை -
தொட்டால்
சுடர் கொடுக்கும்...
மின் விளக்கு....!

கூடத்தில் -
கொலுவிருக்கும்...
கூட்டத்தின் -
நடுவிருக்கும்...
குத்து விளக்கு...!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (30-Apr-15, 7:32 am)
பார்வை : 2118

மேலே