காதல் சுனாமி

உனக்காகவே செத்து செத்து மடிகிறேன்
கோடி முறை ...
அன்பானவனே ...
இரவினிலே தூக்கமின்றி
ஏகத்தின் தாக்கத்தில் அழுது புரண்டு
உனக்காகவே செத்து மடிகிறேன் கோடி முறை ...
ஊரெல்லாம் தேர் இழுத்தார்கள் வடம் பிடித்து ..
உற்சவமாம் ...
நானோ உன் நினைவுகளை அல்லவா
இழுத்து கொண்டிருக்கிறேன்
அடம் பிடித்து ...
விட்டு தொலைந்து போய்விடலாம்
என்றாலோ ..விடாமலே என்னை கட்டி வைத்து
விட்டாய் தேர் காலில் ...
ஆழி பேரலையாய் என்னை அடித்து
கொண்டு போனவனே..
நேபாளத்தின் பூகம்பமாய்
என் நெஞ்சுக்குள்ளே வெடிப்பதேன் ?
உனக்காகவே செத்து மடிகிறேன்
கோடி முறை ....