பிரிவு

பிரிவு
""""""""
ஈரம் காயவில்லை இப்போதான்
இருந்துவிட்டு போனவர்கள்!!!
நீண்ட வாசனையில் இருக்கை
நிறைந்திருந்தது.

பாறை நிலத்தை காலின்
பெருவிரல் கொண்டு
சகதியாக்கி !
மொளனத்தை விதைத்திருக்கிறார்கள்!

நிரந்தர பிரிவிற்கான கடைசி
சந்திப்பு ஒன்று இடம்பெற்றுஇருக்கலாம்!

விம்மிய முகத்தில் கைக்குட்டை
ஒத்தணமும், வெறித்தபார்வைகளும்,
திட்டமிட்டு சொல்லவந்ததை சொல்லதெரியாமல்
அல்லது முடியாமல்""""
மெளனங்களில் மணித்துளிகள்
கரைந்துகொண்டுருந்தன!

எங்கேயோ கேட்ட தேவலயமணியில்
தங்களை அசுவாசபடுத்தி""
தொலைத்துவிட்டேனே? என்ற பச்சைகுத்திய
பழியுடன்!
எனக்கு நீ வேண்டும் "" நீ மட்டும் வேண்டும்""
இந்த பிரபஞ்சத்தில்!
என்று மனசு கைக்குழந்தையாக அழுதாலும்""
நீண்ட பெரும் மூச்சுடன்..,,,,,,
கைகுலுக்கி கலைந்து போகிறார்கள்...,,,,,
இன்னொரு பிறவியில்லாவது இணைவோம்!
என்ற ஊர்யிதப்படுத்தமுடியா நம்பிக்கையில்"""""
லாஷிகா""""

எழுதியவர் : லவன் கேர்ணிங் டென்மார்க் (1-May-15, 5:34 pm)
சேர்த்தது : லவன்
Tanglish : pirivu
பார்வை : 101

மேலே